இனி எப்போதும் விஜய் தான் முதலமைச்சர்-தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ பேச்சு..!

Estimated read time 1 min read

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், என்.ஆர்.சிவபதி ஆகியோர் இன்று தவெகவில் இணைந்தனர்.த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இணைந்தனர்.

இந்நிலையில், தவெக-வில் இணைந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில்,’வாழும் காலம் வரை MGR முதல்வராக இருந்தார். இனி எப்போதும் விஜய் தான் முதலமைச்சர். 2011-ல் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது விஜய் நற்பணி மன்றம் தான்.தமிழகத்தின் தீயசக்தியை அகற்ற வேண்டுமென்றால் தவெக என்ற தூயசக்தி வர வேண்டும்.இனி த.வெ.க பணிகளை சிறப்பாக செய்வோம் என பேசினார்.

தவெகவில் இணைய தாயுள்ளத்தோடு ஒப்புதல் அளித்த பொற்கால முதல்வர் விஜய்க்கு நன்றி என்றும் புகழாரம் சூட்டினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author