அமெரிக்க வணிகத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டை மீறுவது என்ற சாக்குபோக்கில், உலகளவில் சீனாவின் முன்னணி கணினி சில்லுகளுக்குத் தடை விதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஹுவாவெய் நிறுவனத்தின் அசென்ட சில்லும் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தடுப்பு நடவடிக்கையானது, வழக்கமான ஒரு தரப்புவாத பழிவாங்கல் மற்றும் பாதுகாப்புவாத நடவடிக்கையாகும். அதோடு, இது சீன-அமெரிக்க உயர் நிலை பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள ஒத்த கருத்துகளுக்குப் புறம்பானது. இந்நடவடிக்கை சீன நிறுவனங்களின் நியாயமான நலன்களுக்குத் தீங்கு விளைவிப்பதோடு, உலகளவில் குறை மின் கடத்தி உற்பத்தித் துறையின் வினியோக சங்கிலியை பாதிக்கும். மேலும், இது பிற நாடுகளின் முன்னணி கணினி சில்லு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் தொழில் நுட்பத் துறை வளர்ச்சி உரிமையையும் பறிப்பதாகும் என்று பல சர்வதேச சமூகத்தினர் அமெரிக்காவின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமெரிக்கா தன்னுடைய தவறான செயல்களை வெகுவிரைவில் திருத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்கா மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளினால் சீனாவின் வளர்ச்சியை எக்காலத்திலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
