சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 5ஆம் நாள், 14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடரில் அரசுப் பணியறிக்கையை வெளியிட்டார். இந்த பணி அறிக்கையில் சீனா வெளிநாட்டுத் திறப்புகளை மேலும் விரிவுபடுத்த உள்ளதாக இப்பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவை தொழில் துறையை மையமாக கொண்டு, சந்தை நுழைவுக்கு அனுமதி அளித்தல் மற்றும் வெளிநாட்டுத் திறப்புத் துறைகளை விரிவாக்கி, தொலை தொடர்பு, உயிரியல் தொழில் நுட்பம், அந்நிய முதலீட்டு மருத்துவமனை உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டுத் திறப்புப் பணிகளை சோதனை முறையில் மேற்கொள்ளும்.
தவிரவும், உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தில் சீனா முழுமையாகவும் ஆழமாகவும் கலந்துகொள்ளும். சேவை ஏற்றுமதிக்கு ஊக்குமளித்து, இறக்குமதியை ஆக்கப்பூர்வமாக விரிவாக்கி, வர்த்தகத்தின் சமநிலை வளர்ச்சியைத் தூண்ட சீனா பாடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
