இதை எதிர்ப்பாகவே இல்ல.. ஹாட்டுக்கு 90.. பீருக்கு 40.. ஒயினுக்கு 20!”.. இதுவரை அமுக்கிய பணத்தை அப்படியே மீட்டெடுத்த அரசு.. டாஸ்மாக் கட்சி நிதிக்கு வைக்கப்பட்ட செக்..!! 

Estimated read time 0 min read

“தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை நடைமுறைகளில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டுவந்து, அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 1,200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுதவற்கான முக்கிய நடவடிக்கைகளை தற்போதைய அரசு மேற்கொண்டுள்ளது.

இதுவரை டாஸ்மாக் கொள்முதலில் ஹாட் மதுபான பெட்டிகளுக்கு 90 ரூபாயும், பீர் பெட்டிகளுக்கு 40 ரூபாயும், ஒயின் பெட்டிகளுக்கு 20 ரூபாயும் என ‘கட்சி நிதி’ என்ற பெயரில் மாதந்தோறும் சுமார் 100 கோடி ரூபாய் வரை தனியாக வசூலிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுவரை அரசு கணக்கிற்கு வராமல் மறைமுகமாகச் சென்று கொண்டிருந்த இந்த மெகா தொகை முழுவதையும், இனி நேரடியாக அரசு கணக்கிலேயே சேர்ப்பதற்குக் கட்டண வசூல் முறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய சீர்திருத்த நடைமுறையின் மூலம், அரசுக்கு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு மொத்தம் 1,200 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் நேரடியாகக் கிடைக்கும் என்று கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக் நிதி முறையை முறைப்படுத்தும் அரசின் இந்த அதிரடி ஆக்ஷன், தமிழக அரசியல் மற்றும் வணிக வட்டாரங்களில் தற்பொழுது மிகப்பெரிய விவாதப் புயலையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.”

Please follow and like us:

You May Also Like

More From Author