14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் சீனாவின் நாணய இலட்சியம், புதிய மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ளது என்று சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 22ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன மக்கள் வங்கித் தலைவர் பன் குங்செங் தெரிவித்தார்.
இவ்வாண்டின் ஜூன் திங்கள் இறுதி வரை, சீனாவின் வங்கித் துறையின் மொத்த சொத்து சுமார் 4 கோடியே 70 லட்சம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது உலகளவில் முதலிடம் வகிக்கிறது. பங்கு பத்திரம் மற்றும் கடன் பத்திரச் சந்தையின் அளவு உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அன்னிய செலாவணி கையிருப்பு அளவு கடந்த 20 ஆண்டுகள் தொடர்ந்து உலகில் முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, சீனாவில் பல வழிகளிலான, பரந்துபட்ட, பாதுகாப்பான, பயன்மிக்க எல்லை கடந்த ரென்மின்பி செலுத்தல் மற்றும் தீர்வு வலைப்பின்னல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. நகரும் பணம் செலுத்துதல் mobile payment நிலை உலகில் முன்னணியில் உள்ளது என்று தெரிய வந்துள்ளது.