இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல்: ஏப்ரல் 8 போர்நிறுத்த ஒப்பந்தம் சுக்குநூறாக உடைந்தது  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு பகுதியில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதி மீண்டும் குலைந்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிபயங்கர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு, இஸ்ரேல் மீது ஈரான் நடத்தும் முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.
இதனால் அப்பகுதியில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

You May Also Like

More From Author