சீனாவுக்கு உதவியளித்த அமெரிக்க படைவீரர்களின் எலும்பு எச்சங்கள் அமெரிக்காவுக்கு ஒப்படைப்பு

Estimated read time 1 min read

தி ஹாம்ப் வழித்தடத்தின் நெடுகில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க படைவீரர்களின் எலும்பு எச்சங்களை அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு நவம்பர் 10ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் செங்டு நகரில் நடைபெற்றது. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனாவுக்கு உதவியளித்த அமெரிக்க படைவீரர்களில் சீனாவில் காணாமல் போனவர்களின் எச்சங்களைக் கண்டெடுப்பது, 2ஆவது உலகப் போரின்போது சீனாவும் அமெரிக்காவும் இணைந்து ஜப்பானிய பாசிசவாதத்தை எதிர்த்த வரலாற்றுக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். பல ஆண்டுகளாக சீனா மனிதநேய உணர்வின் அடிப்படையில் அமெரிக்க படைவீரர்களின் எச்சங்களைத் தேடுவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து வருகிறது. சீனா-அமெரிக்கா இடையே ஆக்கப்பூர்வமான நிலைத்தன்மையுடைய நெடுநோக்கு உறவை கட்டமைப்பதற்கு நேர்மறை கூறுகளை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவுடன் தொடர்ந்து இத்துறையில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள சீனா விரும்புகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author