முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்ய போர் : பிரதமர் மோடி தீவிர முயற்சி

Estimated read time 0 min read

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து ராஜதந்திர முயற்சிகளில் இந்தியா உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பேச்சுவார்த்தைகள் மூலமே போருக்கு தீர்வு காண முடியும் என்ற இந்தியாவின் நிலைபாட்டை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த திங்கட் கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, அந்த உரையாடல் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜெலென்ஸ்கியுடனான தொலைபேசி உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இருதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான தீர்வை எட்டுவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் பங்களிப்பை உறுதிசெய்யும் இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதாக கூறியுள்ள ஜெலன்ஸ்கி, அபுதாபியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கான ஆயத்தப் பணிகள் குறித்துப் பிரதமர் மோடியிடம் விளக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

போரைத் தொடர அனுமதிப்பதற்குப் பதிலாக, முடிவுக்குக் கொண்டுவருவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறியுள்ள ஜெலன்ஸ்கி, உலகத் தலைவர்களுடன் இந்தியா தொடர்ந்து இதுகுறித்து பேச வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருங்கடல் வழியிலான தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுத்துள்ளதால் சர்வதேச அளவில் உணவுப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ஜெலென்ஸ்கி, கடல்வழிப் பாதைகள் பாதிக்கப்படுவது உக்ரைனை மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பின் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று எச்சரித்துள்ளார்.

உணவுப் பாதைகளை உருவாக்குவதற்கு இந்தியா உதவ முன்வந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி. உணவுப் பாதைகளை சீரமைக்க இந்தியா மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும், இந்த முயற்சியை உக்ரைன் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக பலமுறை இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நெருக்கமான மற்றும் நட்புறவு இருந்தபோதிலும், உக்ரைன் போருக்குத் தீர்வு காணத் தொடர்ந்து வலியுறுத்தும் ஒரு தலைவராக பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் பாராட்டியுள்ளார்.

கிரெம்ளின் மாளிகையும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் விருப்பத்தை அங்கீகரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author