IP தொலைப்பேசிகள், காணொளி வழிக் கூட்டத்துக்கான முனைய சாதனங்கள் உள்ளிட்ட 52 லட்சத்து 54ஆயிரம் யுவான் மதிப்புள்ள SSTL என்று பொறிக்கப்பட்ட சரக்குகளின் சுங்க அனுமதி நடைமுறை, ஆகஸ்டு 31ஆம் நாள் சியான்மென் நகரில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இச்சரக்குகள் கப்பலின் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்படும். சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான நுண்ணறிவார்ந்த மற்றும் பாதுகாப்பான வர்த்தக கப்பல் சேவை ஆதிகாரப்பூர்வமாக இயங்கியதை இது காட்டியுள்ளது. சீனாவுக்கும், பிற பிரிக்ஸ் நாடுகளுக்கும் இடையிலான “SSTL” என்றமுதலாவது நுண்ணறிவார்ந்த மற்றும் பாதுகாப்பான வர்த்தக கப்பல் சேவை இதுவாகும்.
இந்தக் கப்பல் சேவை, தகவல் கூட்டுப் பகிர்வு மற்றும் ஒழுங்குமுறை பரஸ்பர அங்கீகாரம் என்ற அமைப்புமுறையின் மூலம், சரக்குகளின் சுங்க அனுமதி நடைமுறை செயல்திறனைப் பெரிதும் உயர்த்தி, தொழில் நிறுவனங்களின் செலவைக் குறைத்துள்ளது.
இதுவரை, சியான்மென் துறைமுகத்திலிருந்து 6 நாடுகளைச் சேர்ந்த 20 துறைமுகங்களுக்கு செல்லும் 24 பிரிக்ஸ் கப்பல் சேவைகள் இயங்குகினறது.