சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 14ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில்,

சிக்கலான வெளிப்புற சூழலை எதிர்நோக்கும் பின்னணியில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசு தலைவர் புதின் ஆகிய இருவரின் நெடுநோக்கு வழிக்காட்டலின் அடிப்படையில், சீன-ரஷிய உறவு மற்றும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகள் இன்னல்களைப் பயமின்றி உறுதியாகவும் சீராகவும் முன்னேறி வருகிறது. சீன-ரஷிய நெடுநோக்குக் கூட்டாளியுறவு மற்றும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளுக்கான மேலும் உயர் நிலை வளர்ச்சியை விரைவுபடுத்த இரு தரப்பும் பாடுபட வேண்டும் என்றார்.

லாவ்ரோவ் கூறுகையில்,

சீனாவுடனான உயர் நிலை பரிமாற்றத்தை வலுப்படுத்த ரஷியா விரும்புகிறது. சர்வதேச கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் நிதானத்தை இரு தரப்பும் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்றார்.

தவிரவும், அமெரிக்க-ஈரான் மோதல், ஆசிய-பசிபிக் நிலைமை, உக்ரேன் நெருக்கடி உள்ளிட்டவை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிகொண்டுள்ளனர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author