7ஆவது சீன-ஐரோப்பிய திரைப்பட விழா 17ஆம் நாள் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் துவங்கியது. சீனா மற்றும் ஐரோப்பாவின் பன்னாட்டுத் திரைப்படத் துறையினர்கள்,
பண்பாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அறிஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒன்றுகூடி திரைப்படத்துறை சார்ந்த கருத்துக்களைப் பரிமாற்றம் செய்து வெவ்வேறான பண்பாடுகளுக்கிடையிலான உரையாடல்களை நடத்தினர்.
சீனா மற்றும் ஐரோப்பாவின் 10 திரைப்படங்கள் நடப்புத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டன. சீனாவுடனான சந்திப்பு எனும் சர்வதேச பரவல் பகுதி, இளைஞர்களின் திரைப்பட பரிமாற்ற நிகழ்ச்சி, சீன-ஐரோப்பிய இயக்குநர்களின் பேச்சுவார்த்தை முதலிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சீன-ஐரோப்பிய திரைப்பட விழா 2015ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இரு தரப்பின் பண்பாட்டு பரிமாற்றத்துக்கான முக்கிய மேடையாகப் பங்காற்றியுள்ளது. நடப்பு திரைப்பட விழா அக்டோபர் 26ஆம் நாள் வரை நடைபெறுகிறது.
