அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், 2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை பாஜக தொடர் வெற்றிகளைப் பெற்று வருவதாகக் கூறினார்.
2024 மக்களவை தேர்தல் வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆனார் நரேந்திர மோடி என்றும் இது பல ஆண்டுகளுக்குப் பின்னர் படைக்கப்பட்ட சாதனை என்றும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளுக்குத் தலைவர்களோ அல்லது கொள்கைகளோ இல்லை எனக் கூறிய அமித்ஷா, தேசத்தின் எந்தப் பகுதியிலும் அவர்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என விமர்சித்தார்.
பீகாரை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அதற்குத் தயாராக இருங்கள் என்றும் அமித்ஷா உறுதிப்பட கூறினார்.
