2023ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு ஜுலை 6ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி அறிஞர்கள், புகழ்பெற்ற தொழில் முனைவோர், சர்வதேச அமைப்புகளின் பிரதிதிகள் உள்ளிட்ட 1400க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் டுரிங் விருது பெற்றிருந்த 4 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காட்சியில் பங்கெடுத்த தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, கண்காட்சி பரப்பளவு ஆகியவற்றில் புதிய உச்சப் பதிவை எட்டியுள்ள நடப்பு மாநாட்டில், முதன்முறையாக வெளியிடப்படும் அல்லது காட்சிக்கு வைக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கை 30க்கும் அதிகமாகும்.
அதேநாள், 2022ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு புத்தாக்கக் குறியீட்டு அறிக்கை ஷாங்காயில் வெளியிடப்பட்டது. அதன்படி, சீனாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி பெரிதும் பயனளித்துள்ளது. மனித வளம், கல்வி, காப்புரிமை வெளியீடு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ள சீனாவின் செயற்கை நுண்ணறிவு புத்தாக்கக் குறியீடு, தொடர்ந்து 3 ஆண்டுகளாக உலகின் 2ஆவது இடத்தில் உள்ளது. இருப்பினும், அடிப்படை வளங்களின் கட்டுமான நிலை மேலும் உயர்த்தப்பட வேண்டும்.