அமெரிக்காவின் ஜனநாயகமானது அதன் மையச் சிந்தனையிலிருந்து விலகிச் செல்வதாக சீனாவின் சிஜிடிஎன் மற்றும் ரென்மின் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பான்மையினர் தெரிவித்துள்ளனர்.
தாங்கள்தான் ஜனநாயகத்தின் முன்மாதிரி என்று அமெரிக்கா கூறுவதற்கு 70.4 விழுக்காட்டினர் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் அமெரிக்க பாணி ஜனநாயகம் ஒரு நோய்வாய்ப்பட்ட ஜனநாயகம் என்றும் கூறியுள்ளனர்.
தேர்தலின்போது மட்டுமே மக்களின் விருப்பங்கள் கருத்தில் கொள்ளப்படுவதாகவும், தேர்தலுக்குப் பின்னர் அவற்றை அரசியல்வாதிகள் மறந்துவிடுகின்றனர் என்றும் 72.5 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களுக்கு சேவை செய்வதை விட சில வசதி படைத்தவர்களுக்குத்தான் அமெரிக்க ஜனநாயகம் சேவை செய்கிறது என்று 74.5 விழுக்காட்டினரும், பணம் படைத்தவர்களின் பகடைக் காயாக அமெரிக்க ஜனநாயகம் உள்ளது என்று 68 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளிடையே ஒத்துழைப்பை விட எதிரெதிர் செயல்பாடுகளை அதிகம் உள்ளன என்றும் இத்தகைய விரிசல் அமெரிக்க அரசியல் முறையில் தீவிரமான பழுதை ஏற்படுத்தியுள்ளது என்றும் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்கும் அடிப்படை வாழ்க்கைக்கு உத்தரவாதம், அனைவரும் சமம், பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தர உயர்வு, சமூக நிலைத்தன்மை மற்றும் சமூக ஒழுங்கு ஆகியவற்றுக்கு மிகக் குறைவான விழுக்காட்டினரே ஆதரவு அளித்துள்ளனர்.
செயல்பாட்டில் சமத்துவம் என்பது அரிதாகவே கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் இது நிர்வாகத்தின் செயல்பாடுகளை முடக்கவே வழிவகுக்கிறது என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.