2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வருமான வரித் துறை ஒரு நாள் நீட்டித்து, செப்டம்பர் 15-இல் இருந்து, செப்டம்பர் 16-ஆக மாற்றியுள்ளது.
ஆரம்பத்தில் ஜூலை 31 என நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, ஏற்கனவே ஒரு முறை நீட்டிக்கப்பட்டது.
வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2025-26 ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2025 என முதலில் நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் பின்னர் செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இப்போது கடைசி தேதியை செப்டம்பர் 16, 2025 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
