8 முதல் 11ஆம் நாள் வரை நடைபெற்ற சீன சர்வதேச முதலீட்டு வர்த்தக பொருட்காட்சி, சீனாவைப் பார்வையிட்டு வாய்ப்புகளைத் தேடி பார்க்கும் சன்னலாக மாறியுள்ளது.
முதலீட்டைத் தலைப்பாக கொண்ட சீனாவின் ஒரே ஒரு தேசிய நிலை பொருட்காட்சியாக, இவ்வாண்டின் முதலீட்டு வர்த்தக பொருட்காட்சியின் தலைப்பு, சீனாவுடன் இணைந்து எதிர்காலத்திற்கு முதலீடு செய்வது என்பதாகும்.
பாதுகாப்புவாதம் எழுப்பி, உலக பொருளாதாரத்தின் நிலைதன்மை குறைந்த நிலையில், சீனாவில் முதலீடு செய்வது என்பது எதிர்காலத்திற்கு முதலீடு செய்வதே தான் என்று இப்பொருட்காட்சியில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது மிக பெரியளவான சீன சந்தை, முன்னேறி வரும் நிலையில் நிறைய வாய்ப்புகளை வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவிலுள்ள அன்னிய தொழில் நிறுவனங்கள், புதிய உயர் உற்பத்தி துறையில் முதலீடு செய்துள்ளன.
அன்னிய தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பேசும் போது நிலைதன்மையை அவர்கள் கோடிட்டு காட்டினர். சீனா திறப்பு பணியைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு, தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உந்து சக்தி ஊட்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
அன்னிய முதலீட்டாளர்கள், நடவடிக்கை மேற்கொண்டு சீன சந்தையில் கலந்துகொண்டு, முன்னேறும் ஆற்றலைப் பெற்றன.