தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அறிவித்துள்ளார்.
புனித ரமலான் மாதம் தொடங்குவதற்கு முந்தைய தினம், மார்ச் 11 ஆம் தேதி பிறை தென்பட்டதை தொடர்ந்து, மார்ச் 12 ஆம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு துவங்கியது.
இஸ்லாமிய மக்கள் அதிகாலை தொடங்கி, மாலை 6:30 மணி வரை உணவு, தண்ணீர் இன்றி நோன்பு நோற்பார்கள்.
நேற்றுடன் 29 நாட்கள் நிறைவடைந்த நிலையில், ஷவ்வால் மாதத்தின் பிறை நேற்று தென்படவில்லை.
அதனால், நாளை, வியாழக்கிழமை, ஏப்ரல் 11 ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்தார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.