சிங்கப்பூரில் சீனத் துணைத் தலைமையமைச்சர்- சிங்கப்பூர் தலைமையமைச்சர் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், அரசவையின் துணைத் தலைமையமைச்சருமான டிங் சுய்சியாங், 22ஆம் நாள், சிங்கப்பூரில், அந்நாட்டின் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து உரையாடினார்.

அப்போது டிங் சுய்சியாங் கூறுகையில், இப்பயணத்தின் போது, சிங்கப்பூர் துணைத் தலைமையமைச்சர் கன் கிம்யோங்குடன் இணைந்து,  சீன-சிங்கப்பூர் இரு தரப்பு ஒத்துழைப்பு இயங்குமுறைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகின்றேன். இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளை நடைமுறைப்படுத்தி, சீன-சிங்கப்பூர் நடைமுறை ஒத்துழைப்பு மூலம் அதிகமான சாதனைகளை பெறுவதை ஊக்குவிக்கப் பாடுபடுவேன் என்றார். மேலும், சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை மற்றும் சிங்கப்பூர் நாட்டின் தேசிய வளர்ச்சியில் முன்னுரிமை வாய்ந்த விவகாரங்களுடன் இணைத்து, செயற்கை நுண்ணறிவு, பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் முறையில் ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

லாரன்ஸ் வோங், டிங் சுய்சியாங்கின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்ததோடு, 2027ஆம் ஆண்டில், ஆசியான் தலைமை பதவியை சிங்கப்பூர் ஏற்க உள்ளது. இதனை வாய்ப்பாகக் கொண்டு, பல்வேறு துறைகளிலான சீன-ஆசியான் ஒத்துழைப்புகளை சிங்கப்பூர் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றும் என்றும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author