சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனத்தில் மிக அதிக கனம் கொண்டது மக்கள் என்பதாகும்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, ஷிச்சின்பிங், 100 முறைகளுக்கும் மேல் அடி மட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு பயணம் மேற்கொண்டார். பொது மக்களின் தேவையும் விருப்பங்களும் மத்திய அரசின் முக்கிய கூட்ட நிகழ்ச்சி நிரல்களில் சேர்க்கப்பட்டு, சீர்திருத்த அம்சங்களாக மாறியுள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வில், பன்முக சீர்திருத்தங்களை மேலும் ஆழமாக்கி, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தை முன்னெடுப்பது குறித்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் 46 இடங்களில் “மக்கள்” என்பது குறிப்பிடப்பட்டது. மக்களின் விருப்பங்கள், சீர்திருத்தத்தால் பதிலளிக்கப்படும் என்பது வலியுறுத்தப்பட்டது.
நாடு மற்றும் பொது மக்களுக்கு ஷிச்சின்பிங்கின் நேர்மையான அன்பு இதுவாகும். 140 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஷிச்சின்பிங்கின் அர்ப்பணிப்பும் இதுவாகும்.
