சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் அதிக கவனம் செலுத்தும் சர்வதேச சமூகம்

Estimated read time 1 min read

சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை ஆகும். சர்வதேச சமூகம் இதில் அதிக கவனம் செலுத்துகிறது. உலகிற்கு நேர்மறையான செய்தியை வழங்கியுள்ளது என்று பன்னாட்டவர்கள் கருதினர்.

கிழக்காசிய பிரச்சினை ஆய்வாளரான அமெரிக்காவின் ஜெஸ்ஸி கேட்ஸ் கூறுகையில், சீன-அமெரிக்க உறவு ஒரு பெரிய கப்பலைப் போன்றது என்று இப்பேச்சுவார்த்தையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வர்ணித்தார். இரு நாடுகள் கையோடு கை கோர்த்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார். இரு நாடுகள் ஆக்கப்பூர்வ நெடுநோக்கு நிலைத்தன்மை வாய்ந்த உறவை உருவாக்குவது, நமது முன்னேற்றத்திற்கு இன்றியமையாத தேர்வாகும். இரு நாடுகள் நேர்மறையான திசை நோக்கி செயல்படுவது, இரு நாடுகளுக்கும் மட்டுமின்றி முழு உலகிற்கும் பயன் அளிக்கும் என்று தெரிவித்தார்.

பிரிட்டன் ராயல் கிழக்கு மேற்கு உத்திநோக்கு ஆய்வகத்தின் தலைவர் ப்ஃபெடங் கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும் உலகில் முதல் இரண்டு பெரிய நாடுகளாக, பொருளாதாரத்தின் செழுமையை நனவாக்குவது அவற்றின் முக்கிய இலக்காகும். இரு நாடுகள் கூட்டு வெற்றியைத் தேடி, உலகின் நிதானம் மற்றும் அமைதிக்குப் பங்காற்றுவது இச்சந்திப்பின் முக்கிய அம்சமாகும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author