வங்கக்கடலின் மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், குறிப்பாக நாளை காலை 9 மணிக்குள், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு, வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்குவங்க கடற்கரை பகுதிகளை நோக்கி செல்லும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் தாக்கமாக, தமிழகத்தில் மழை நிலைமை தொடர்ந்து நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு
