சீன-பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி தொடர்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அழைப்பை ஏற்று, 24ஆம் நாள், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் மிலிபாண்ட உடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

அப்போது வாங்யீ கூறுகையில், இரு நாட்டு தலைவர்களின் வழிக்காட்டலின் கீழ், இரு தரப்புறவின் மேம்பாட்டு வளர்ச்சி போக்கு ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது.  அடுத்தாண்டு,  சீன-பிரிட்டன் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவாகும். பிரிட்டனுடன் இணைந்து, இரு தரப்புறவின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, பிராந்திய மற்றும் உலக அமைதிக்கும் நிதானத்திற்கும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும் என்று சீனா விரும்புகிறது. சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் போது, திறப்பு அளவைத் தொடர்ந்து விரிவாக்கும். தாராள வர்த்தக கோட்பாட்டை பிரிட்டன் பின்பற்றி, திறப்பு சைகையைக் காட்டி, பிரிட்டனில் சீன நிறுவனங்களுக்கு தொழில்களை நடத்தும் சீரான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்போதைய மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் நிலைமை உள்ளிட்டவை பற்றியும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author