ஜுன் 28 முதல் 30ஆம் நாள் வரை, 2023ஆம் ஆண்டு ஆர்.சி.ஈ.பி. பொருளாதார வர்த்த ஒத்துழைப்பு பற்றிய உயர் நிலை மன்றம் ஷன்துங் மாநிலத்தின் டஅசிங்தாவ் நகரில் நடைபெற்றது. கையோடு கை கோர்த்து முன்னேறுவது, செழுமையை கூட்டாக வளர்ப்பது என்பது இம்மன்றத்தின் தலைப்பாகும். ஆர்.சி.ஈ.பி. உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், சீனாவுக்கான தூதாண்மை அதிகாரிகள், வர்த்தக முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வணிக சம்மேளனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்து ஆர்.சி.ஈ.பி. மூலம் பெற்றுள்ள சாதனைகளைப் பாராட்டினர்.
சீன-ஜப்பான்-தென்கொரியா ஒத்துழைப்பு செயலகத்தின் தலைவர் ஒ போச்சியன் அம்மையார் கூறுகையில்,
இந்த மூன்று நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளுக்கு ஆர்.சி.ஈ.பி. முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒரே தாராள வர்த்தக முறைமையில் இந்த மூன்று நாடுகளும் சேர்வது இதுவே முதன்முறைய என்றும் இம்மூன்று நாடுகள் இதிலிருந்து அதிக நலன் பெறும் என்றும் கூறினார்.
ஆர்.சி.ஈ.பி. உறுப்பு நாடான கம்போடியா, இதிலிருந்து நிறைய பயனைப் பெற்றுள்ளது என்று சீனாவுக்கான கம்போடிய தூதர் கே சைமீலி தெரிவித்தார்.