சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 24ஆம் நாள் கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில்,
ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் டியன் ஜின் உச்சி மாநாடு, அடுத்த 10 ஆண்டுகாலத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது. இவ்வமைப்பின் உயர் நிலை வளர்ச்சி கட்டத்தை இது துவங்கியது என்றார்.
ஷாங்ஹாய் எழுச்சியின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவது, அமைதியையும் நிதானத்தையும் வலுப்படுத்துவது, கூட்டு வெற்றிக்கு ஊக்கமளிப்பது, உலக நிர்வாக மாதிரி மண்டலத்தை உருவாக்குவது ஆகிய 4 முன்மொழிவுகளை வாங்யீ முன்மொழிந்தார்.
