“30 டிகிரி வட அகலக்கோடு” என்ற எட்டு அத்தியாயங்களைக் கொண்ட ஆவணப்படம், வட அரைக்கோளத்தின் உயிரினங்கள் வாழத்தகுந்த மண்டலத்தில் உள்ள மனித நாகரிகங்கள் குறித்த ஒரு பார்வையை வழங்கியுள்ளது.
புவியின் 30 டிகிரி வட அகலக்கோட்டில் உள்ள உயிரினங்கள் வாழத்தகுந்த மண்டலத்தில் ஆரம்பகால மனித நாகரிகங்களின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சி பற்றிய கதைகள் இந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதச் சமூகங்கள் உருவாகுவதற்குத் தேவையான காலநிலை மற்றும் சுற்றுச்சூழலை இந்த மண்டலமானது கொண்டிருந்திருக்கக்கூடியது என்று கருதப்படுகிறது.
இந்த ஆவணப்படம் நாகரிகத்தின் தோற்றம், கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
நான்கு கண்டங்களில் உள்ள 10 நாடுகளில் பரவியுள்ள முக்கிய தொல்பொருள் தளங்கள் மற்றும் பண்டைய நினைவுச்சின்னங்களையும் இவ்வாவணப்படம் ஆராய்கிறது. மேலும், சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அறிஞர்களின் அறிவார்ந்த கருத்துக்கள் இதில் பெறப்பட்டுள்ளன.
