தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக். 3) தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை அடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகம், தென் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 7 ஆம் தேதி வரை லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
