சீனப் பொறியியல் கழகம் நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், கட்சி மத்தியக் கமிட்டியின் சார்பில் வாழ்த்து கடிதத்தை அனுப்பி, இக்கழகத்தின் மூத்த அறிஞர்களுக்கும், அனைத்து அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பணியாளர்களுக்கும் மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்தார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளில், கட்சியின் வலிமையான தலைமையுடன், சீனப் பொறியியல் கழகம், பொறியியலின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றி, இன்னல்களைச் சமாளித்து, நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்கத்தையும், பொருளாதார மற்றும் சமூகத்தின் உயர்தர வளர்ச்சியையும் முன்னேற்றுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.
இந்தப் புதிய துவக்க புள்ளியில், சீனப் பொறியியல் கழகம் நாட்டின் நெடுநோக்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் ஆற்றலை வெளிக்கொணர்த்து, அறிவியலாளர் எழுச்சியைப் பரவல் செய்து, முக்கிய மைய தொழில் நுட்பங்களில் முன்னேற்றத்தைப் பெற்று, உலக தொழில் நுட்ப வல்லரசின் கட்டுமானத்துக்கு மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீனப் பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞர்களின் கலந்துரையாடல் கூட்டம் ஜுன் 3ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான டிங் சுவேசியாங் இக்கூட்டத்தில் பங்கெடுத்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் வாழ்த்துக் கடிதத்தை வாசித்தார்.