அத்துமீறிய ரசிகன்… முகத்திலேயே எட்டி உதைத்த பிரபல பாடகி.. வைரலாகும் வீடியோ..!!! 

Estimated read time 1 min read

தாய்லாந்தின் சோன்புரி பகுதியில் நடைபெற்ற நேரடி இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த ‘ஐஸ்’ என்றழைக்கப்படும் பிரபல தாய்லாந்து பாடகி நம்கேங் திப்ம்வான், தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற ஆண் ரசிகர் ஒருவரை முகத்தில் எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நிகழ்ச்சியின் போது மேடைக்கு அருகே வந்த அந்த நபர், முதலில் பாடகியின் கையைப் பிடிக்க முயல்வது போல் நடித்து, பின்னர் அவரது மார்பகத்தைத் தொட முயன்றதாகக் கூறப்படுகிறது; இதைக் கவனித்த பாடகியின் மேலாளர் உடனடியாகப் பாதுகாவலர்களுக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த நபர் கூட்டத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டுப் பிடித்து வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த 27 வயதான பாடகி ஐஸ், தனது பாடலை முடித்த பிறகு, பாதுகாவலர்களின் பிடியில் மண்டியிட்டிருந்த அந்த நபரிடம் சென்று பேசியதோடு, ஆத்திரத்தில் அவரது முகத்தில் எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக உள்ளூர் போலீசார் பாடகியைச் சந்திக்க உள்ளதாகவும், ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்திற்குப் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாடகி ஐஸ், மேடையில் இருக்கிறார்கள் என்பதற்காகக் கலைஞர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தவோ, சம்மதமின்றி உடலைத் தொடவோ யாருக்கும் உரிமை கிடையாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், “வெறும் மன்னிப்பு கேட்பதால் அத்துமீறலை இல்லாமல் ஆக்கிவிட முடியாது” என அவர் பதிவிட்டுள்ள கருத்து, நேரடி நிகழ்ச்சிகளில் கலைஞர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட எல்லைகள் குறித்த விவாதத்தை இணையத்தில் மீண்டும் எழுப்பியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author