ஒருமித்த இலக்கைக் கொண்ட நாடுகளுக்கிடையில் வாய்ப்புகள் அதிகரிப்பு: பபுவா நியு கினி தலைமையமைச்சர்

சீனாவுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகக் கட்டியமைக்கும் புரிந்துணர்வுக் குறிப்பாணையை 2018ஆம் ஆண்டு கையொப்பமிட்ட முதல் பசிபிக் தீவு நாடு, பபுவா நியு கினி ஆகும். கடந்த சில ஆண்டுகளாக, இரு நாட்டுத் தலைவர்களின் கவனம் மற்றும் ஊக்கத்துடன், சீன-பபுவா நியு கினி பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புகளில் அதிக வளர்ச்சி கண்டுள்ளது.

குறிப்பாக ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கூட்டுக் கட்டுமானம் என்ற முன்மொழிவின் கீழ், பபுவா நியு கினியில் பல திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பபுவா நியு கினி தலைமையமைச்சர் ஜேம்ஸ் மாரபே அண்மையில் சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனத்துக்குப் பேட்டியளித்த போது கூறுகையில், இவை எல்லாம் ஒருமித்த இலக்கைக் கொண்ட கூட்டாளிகளுக்கிடையில் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதை காட்டுகிறது. இரு தரப்புப் பொருளாதார வர்த்தக உறவை வலுப்படுத்தி, சீன மக்களுடன் இணைந்து செழுமையைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்ள பபுவா நியு கினி விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author