2025ம் ஆண்டில் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 52 ஆயிரத்து 37 கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 19.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சீனாவின் 14ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் சீன-ஐரோப்பிய(ஆசியா)சரக்கு தொடர்வண்டியின் பாதியளவானது சின்ஜியாங் வழியாக அனுப்பப்பட்டது. மேலும், அங்குள்ள முக்கியச் சாலை நுழைவாயில்களில் 24 மணிநேர சுங்க நடைமுறையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. உருமுச்சியின் தியேன் ஷன் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானங்கள், 37 வழித்தடங்களுடன் 22 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 36 நகரங்களுச் சென்றடைந்தன. கடந்த 5 ஆண்டுகளில் சின்ஜியாங் நுழைவாயில் மூலம் நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி சரக்குப் போக்குவரத்தானது ஆண்டுக்கு சராசரியாக 7.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சர்வதேச வணிகச் சூழலின் தொடர்ச்சியான மேம்பாடு, சின்ஜியாங்கின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக முன்னெடுப்புக்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றது என்று குறிப்பிடத்தக்கது.
