ஸ்விட்சர்லாந்து கூட்டாட்சி தலைவருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 30ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில், ஸ்விட்சர்லாந்து கூட்டாட்சி தலைவர் கை பார்மெலுவை சந்தித்து பேசினார்.

 

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், ஐரோப்பாவில் சீனாவின் ஒரு முக்கிய கூட்டாளியாக திகழும் ஸ்விட்சர்லாந்து நாடு, சீனாவுடனான ஒத்துழைப்பில் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே எப்போதும் முன்னணியில் உள்ளது என்று தெரிவித்தார். மேலும், ஸ்விட்சர்லாந்துடன் இணைந்து, ஒத்துழைப்புறவை வலுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார உலகமயமாக்கத்தை ஊக்குவிக்கவும், சீன-ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும் மதிப்புமிக்க நம்பிக்கையையும் அதிக உறுதித்தன்மையையும் கொண்டு செல்லவும் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

 

கை பார்மெல் கூறுகையில், இவ்வாண்டு ஸ்விட்சர்லாந்துக்கும் சீனாவுக்கும் இடையே புத்தாகம் ரீதியான நெடுநோக்கு கூட்டாளி உறவு நிறுவப்பட்டதன் 10ஆவது ஆண்டு நிறைவாகும். இரு தரப்பும் குறுகிய காலத்தில் தாளார வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவேற்றின. இது, இரு தரப்புக்கிடையேயான உயர் பரஸ்பர நம்பிக்கையை வெளிப்படுத்துவதோடு, இரு நாடுகளின் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும், சுவிட்சர்லாந்து ஒரே சீனா என்ற கோட்பாட்டை உறுதியாகப் பின்பற்றுவதோடு, சீனாவுடன் உரையாடல்களையும் பரிமாற்றங்களையும் வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பைப் பேணவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளின் பெரும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author