ஜனவரி 28ஆம் நாளிரவு 8 மணிக்கு, மகிழ்ச்சி மற்றும் மங்கலம் நிறைந்த சூழலில், சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த 2025ஆம் ஆண்டு வசந்த விழா கொண்டாட்ட நிகழ்ச்சி சிரிப்புடன் கூடிய பண்பாட்டு விருந்தை வழங்கி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பாம்பு ஆண்டுக்கான வாழ்த்துகளைத் தெரிவித்தது.
இந்நிகழ்ச்சியானது, சீனாவின் புதிய ஊடகத் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டமை மற்றும் தொடர்புகளின் எண்ணிக்கை வரலாற்றில் சாதனையைப் படைத்துள்ளது. பூர்வாங்க புள்ளிவிவரங்களின் படி, புதிய ஊடகத் தளத்தில் இந்நிகழ்ச்சியைப் பார்வையிட்ட பார்வைகளின் எண்ணிக்கை 281.7 கோடியை எட்டியது. இது, கடந்த ஆண்டை விட 69 கோடி அதிகமாகும்.
சி.ஜி.டி.என். 82 மொழிகளில் வெளிநாட்டு புதிய ஊடகத் தளங்களின் மூலம் வசந்த விழா நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் நேரலையாக ஒளிபரப்பியது. இந்நிகழ்ச்சி தொடர்பானவற்றை 159 கோடிக்கும் அதிகமானோர் வாசித்துள்ளதோடு, 52 கோடி வெளிநாட்டவர்கள் காணொலியைப் பார்வையிட்டுள்ளனர்.