4வது சீன சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சி ஜூன் மாதத்தின் 22 முதல் 26ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.
இதில் புத்தாக்கத் துறையில் சீனா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புகளும், உலகிற்கு சீன உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் பங்கும் முக்கியமாக வெளிப்படுத்தப்படும்.
நவம்பர் மாதம் ஷென்செனில் நடைபெறும் 2026ஆம் ஆண்டு ஏபெக் தொழில் முனைவோர்கள் கூட்டம் மற்றும் ஏபெக் வணிக ஆலோசனைக் கமிட்டியின் 4வது கூட்டத்தை நடத்தும் உரிமையை, சீன சர்வதேச வர்த்தக மேம்பாட்டுக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், இந்த விநியோகச் சங்கிலி பொருள்காட்சியின் போது, ஏபெக் கூட்டத்துக்கான சீனத் தொழில் முனைவோர்கள் மன்றம் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளும் நடைபெற உள்ளன.
