பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றம் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது! 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இனி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற புதிய தடைச் சட்ட மசோதாவை அந்நாடு நிறைவேற்றியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட்போன்களிலும், சோஷியல் மீடியாக்களிலும் மூழ்கிக் கிடப்பதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க பிரான்ஸ் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இது வெறும் பேச்சுடன் நிற்காமல், சட்டமாகவே மாற்றப்பட்டுள்ளதால் மற்ற நாடுகளும் இதைக் கவனிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தத் தடைச் சட்டமானது வரும் செப்டம்பர் மாதம், அதாவது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும் காலத்திலிருந்து அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் மனநலம் மற்றும் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த முடியும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது. 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விரும்பினால், பெற்றோரின் முறையான அனுமதி பெற வேண்டும் அல்லது முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம். “டிஜிட்டல் அடிமைத்தனத்திலிருந்து” குழந்தைகளை மீட்க பிரான்ஸ் எடுத்துள்ள இந்த முயற்சி உலக நாடுகளிடையே ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
