Web team
சுற்றுச்சூழல் மாசு – கவிஞர் இரா.ரவி
மாநகராட்சியிலிருந்து இரண்டு கூடை தந்தனர்
மக்கும் குப்பைக்கு ஒன்று,
மக்காத குப்பைக்கு மற்றொன்று
மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
மொத்தக் குப்பைக்கும் ஒன்று,
மாவு அரைக்க ஒன்று
சுற்றுச்சுழல் விழிப்புணர்வு மக்களுக்கு
சுத்தமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்
முன்பெல்லாம் கடைக்குச் செல்லும் போது
மறக்காமல் மஞ்சள் பை எடுத்துச் செல்வார்கள்
இப்போதெல்லாம் கேடு விளைவிக்கும் கேரி பேக்
எங்கும் எதிலும் பரவிக் கெடுக்கின்றது
நிலத்தடி நீரை பூமிக்கு செல்ல விடாமல் தடுக்கும்
நா பேச வராத விலங்குகளின் உயிரைப் பறிக்கும்
எய்தவன் இருக்க அம்மை நோகின்றோம்
இந்தியா முழுவதும் பாலிதீன் தயாரிப்பை தடை செய்ய வேண்டும்
காப்பி குடிக்கும் கோப்பைகள் பிளாஸ்டிக்
கண்ட இடங்கள் யாவும் எங்கும் பாலித்தின்
ஒவ்வொருவரும் வீட்டை சுத்தமாக வைக்கிறோம்
ஒரு நிமிடம் நாட்டை சுத்தமாக்க யோசித்தோமா?
சிங்கப்பூர் சென்றால் குப்பையைத் தொட்டியில் போடுகின்றான்
சிங்காரச் சென்னையில் குப்பையை சாலையில் போடுகின்றான்
காரணம் சிங்கப்பூரில் கட்ட வேண்டும் அபராதம்
கேள்வியே இல்லை இங்கு என்ற எண்ணம்
எல்லோரும் பால் ஊற்றுவார்கள் நாம் தண்ணீர் ஊற்றுவோம்
இப்படியே எல்லோரும் தண்ணீர் ஊற்றும் தான்கதை நடக்குது.
—
.