குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியால் பொது மக்கள் அச்சம்!

நெல்லை அருகே காவல்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்தது.

அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு பகுதியில் சிறப்பு காவல் பயிற்சி பள்ளி காவலர்கள் மற்றும் அலுவலர்கள் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.

இங்கு இரவு நேரங்களில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து, கரடி, மிளா, சிறுத்தை மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது இறங்குவது வழக்கம்.

இந்நிலையில், பட்டப்பகலியேயே கரடி ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்து, அங்குள்ள மாமரத்தில் ஏறி மாம்பழத்தை சுவைத்துள்ளது.

இந்த தகவல் அங்குள்ளவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில், கரடியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author