தமிழகத்தில் அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம் என்று போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற மாநில ஆம்னி பேருந்துகளில் பயணிகள் யாரும் அரசின் அனுமதி இல்லாமல் முன் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசின் விதிகளை மீறி இயங்கக்கூடிய ஆம்னி பேருந்துகள் இனி முடக்கப்படும் என்பதால் மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் எனவும் விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.