நாமக்கல்லில் வரும் 4-ம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற பிரச்சார பயணத்தை மேற்கொள்கிறார்.
இதுகுறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்ட பாஜக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு சார்பில், சுற்றுப்பயணம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தைப் பூங்கா சாலையில் இருந்து தொடங்கி வைத்தனர்.
.அப்போது மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கையேடுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. சுற்றுப்பயணத்தில் இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
