விதர்பா மண்டலத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் : தேவேந்திர ஃபட்னாவிஸ்

நாக்பூர், உள்ளிட்ட பகுதிகளை கொண்ட விதர்பா மண்டலத்தில் நடைபெறும் முதல்கட்ட  வாக்குப்பதிவில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என  மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில்,  பூத் மட்டத்தில் முன்னேற்பாடுகளை செய்து, அடிமட்டம் வரை பணிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் நேர்மறையான எண்ணத்தை  காண முடிவதாகவும், எனவே விதர்பா மண்டலத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்று அவர் கூறினார்.

48 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் முதல்கட்டமாக 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2019 மக்களவைத் தேர்தலில் 25 இடங்களில்  போட்டியிட்ட பாஜக 23 இடங்களிலும், பிரிக்கப்படாத சிவசேனா  18 இடங்களிலும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி கூட்டணியின் ஒரு பகுதியான பிளவுபடாத NCP 19 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author