இவ்வாண்டின் மார்ச் திங்கள் வெளியிடப்பட்ட சீன-ரஷிய கூட்டறிக்கையில், சீன-ரஷிய உறவு, வரலாற்றில் மிக உயர்நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த பேட்டியில், தற்போதைய இரு நாட்டுறவு, கடந்த 20 ஆண்டுகளாக சீராக வளர்ச்சியடைந்து வந்ததில் கிடைத்த சாதனையாகும். ரஷிய-சீன உறவு, உலக நிலைத் தன்மைக்கான அடிப்படையாகும். இரு நாட்டுறவு சரியான திசை நோக்கி முன்னேறிச் செல்கிறது. இரு நாட்டு மக்களின் நலன்களுக்கு இது பொருந்தியது என்றார்.
பிரிக்ஸ் அமைப்பில் புதிய நாடுகளைச் சேர்ப்பது குறித்து அவர் கூறுகையில், பிரிக்ஸ் அமைப்பில் சேர்ந்த நாடுகள், பிரிக்ஸ் கட்டுக்கோப்புக்குள் பலதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கூட்டு முயற்சிகளுடன் உலக பலதுருவமயமாக்கத்தின் நனவாக்கத்தை விரைவுப்படுத்தும் என்றார்.
மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானமும், யூரேசிய பொருளாதார ஒன்றியக் கட்டுமானமும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளிக்கிறது என்றும் புதின் தெரிவித்தார். எதிர்காலத்தில், சீனாவுடன் பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.