2023 ஆம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த 10 தருணங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் தனித்துவமான ஒரு பிரதமராக திகழ்கிறார். மக்களோடு மகளாக இணைந்து மகிழ்ச்சியை மட்டும் இல்லாமல் அவர்களின் கஷ்டத்திலும் பங்கெடுத்து சிறந்த பிரதமராக விளங்கினார்.
பாரத பிரதமரின் 10 சிறந்த தருணங்களை பார்ப்போம் :
1. போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய பிரதமர் :
இந்திய போர் படையில் இருக்கும் தேஜஸ் எனும் போர் விமானத்தில் பிரதமர் மோடி நவம்பர் 25ஆம் தேதி பயணம் செய்தார். விமான போர் படையின் சீருடை அணிந்தபடி ஜெட்டில் ஏறி பயணம் செய்தார். இதன் மூலம் போர் விமானத்தில் பறந்த முதல் பாரத பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.
2. இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்தார் :
இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இந்தியா எதிர்பாராத விதமாக இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. வீரர்களின் ஓய்வறையில் சோகத்தில் இருந்த வீரர்களை பாரத பிரதமர் அவர்களின் ஓய்வறைக்கே சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
3. சந்திரயான் 3 வெற்றி :
2023ஆம் ஆண்டு இந்திய விண்வெளி நிறுவனத்திற்கு ஒரு மறக்கமுடியாத ஆண்டாக திகழும். ஆம் இந்த ஆண்டு இஸ்ரோ நிறுவனம் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. சந்திரயான் வெற்றிக்கு பலரும் வாழ்த்து சொன்ன நிலையில் பாரத பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்தார். பின்பு அவர்களை நேரில் சென்றும் பார்த்தார். மேலும் சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயரும் சூட்டினார்.
4. குழந்தையாக மாறிய பிரதமர் :
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தன்னைச் சந்திக்க வரும் குழந்தைகளிடம் விளையாடி மகிழ்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், நவம்பர் 16 ஆம் தேதி 2 குழந்தைகளுக்கு ஒரு நாணயத்தை எடுத்து தனது நெற்றியில் ஒட்டவைத்து, அதை தனது பின் தலையில் தட்டி கீழே விழச் செய்கிறார். அதேபோல, அச்சிறுவன் மற்றும் சிறுமியின் நெற்றியிலும் நாணயத்தை ஒட்டவைப்பதுபோலவும், பின் தலையில் தட்டினால் அது விழாதது போலவும் மேஜிக் செய்து வேடிக்கை காட்டி விளையாடி மகிழ்ந்தார்.
5. குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் :
ஆகஸ்ட் 30ஆம் தேதி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பள்ளி மாணவர்களுடன் ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார். குழந்தைகளுடன் பேசி, விளையாடி வந்த மோடிக்கு ஒரு குழந்தை அவரின் கன்னத்தில் முத்தம் கொடுத்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
6. பாரிஸில் எடுத்த செல்ஃபி :
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் பிரான்ஸில் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற தேசிய தின விழாவில் பங்கேற்றார். அன்றிரவு பாரிஸில் அமைந்துள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்தில் இந்தியாவிலிருந்து நடிகர் மாதவனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விருந்தின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாதவனுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலானது.
7. பாரத பிரதமரின் பாதம் தொட்ட ஆப்பிரிக்கா பாடகி :
அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடலை பாடினார்.
இந்திய தேசிய கீதம் பாடிய பிறகு மேரி மில்பென், பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் பெறுவதற்காக அவரது பாதம் தொட்டு வணங்கினார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
8. மெலோடி-யின் நட்பு :
துபாய் பருவநிலை மாநாட்டின் இடையே, பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் எடுத்துக் கொண்ட செல்பி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை மெலோனி அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். மேலும், இரு தலைவர்களின் பெயர்களை இணைத்து ‘மெலோடி’ என்ற ஹேஷ்டேக்குடன், ‘சிஇஓ28ல் நல்ல நண்பர்கள்’ என்ற கருத்தை பதிவிட்டிருந்தார். அதற்கு பாரத பிரதமர் மோடியும் நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.
9. சிறிய மூவர்ண கோடிக்கு பிரதமரின் மரியாதை :
ஆகஸ்ட் 23ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் மேடையில் ஏறிய பிரதமர் அங்கே கீழே இருந்த சிறிய மூவர்ணதை எடுத்தார், அதனை கண்டு அங்கே இருந்தவர்கள் அதனை எடுத்தனர்.
10. ஷா ரஷீத் அகமது குவாத்ரியின் நன்றி :
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில், 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை வழங்கினார். அவர்களில் ஒருவர் கர்நாடகாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற பித்ரி வேரின் கைவினைக் கலைஞரான ஷா ரஷீத் அகமது குவாத்ரி.
பத்ம விருது பெற்றவர்களைச் சந்திக்க பிரதமர் மோடி வந்தபோது, ஷா ரஷீத் அகமது குவாத்ரி, பிரதமரிடம் கைகுலுக்கி, “நான் கர்நாடகாவில் உள்ள பிதாரைச் சேர்ந்தவன். ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இந்த விருதுக்கு விண்ணப்பித்தேன். எனக்கு அது கிடைக்கவில்லை. பா.ஜ.க அரசு அதன் பிறகு ஆட்சிக்கு வந்தது, இது பா.ஜ.க அரசு, எனவே, முஸ்லிம்களுக்கு விருது வழங்காது என்று நினைத்து அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால் நீங்கள் என்னை தேர்ந்தெடுத்து என் சிந்தனை தவறு என நிரூபித்துள்ளீர்கள். இதற்கு மிக்க நன்றி” என தெரிவித்தார்.