“பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம்” பற்றிய நினைவு கூட்டத்தை நவம்பர் 29ஆம் நாள் ஐ.நா. நடத்தியது. இக்கூட்டத்துக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், பாலஸ்தீன பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, மத்திய கிழக்கு மைய பகுதியாக இருக்கிறது. இது சர்வதேச நியாயத்தையும் நீதியையும் பற்றியது. பாலஸ்தீன மக்கள் சுயாதீன நாட்டை நிறுவுவதற்கான சட்டபூர்வமான உரிமைகளை அடைய முடியவில்லை என்பது இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் முக்கிய காரணமாகும் என்றார் அவர். சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து சீனா தொடர்ந்து கூட்டாக பாடுபட்டு, சர்வதேச ஒத்த கருத்துக்களை எட்டி, பாலஸ்தீனப் பிரச்சினையை இரு நாடுகள் தீர்வு திட்டத்தின்” சரியான பாதையில் முன்னேற்று, கூடிய விரைவில் விரிவான, நீதியான மற்றும் நிலையான தீர்வு காண சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.