சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 30ஆம் நாள் பிற்பகல், சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் முதலாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டின் எழுச்சியை முழுமையாகச் செயல்படுத்தி, தேசிய பாதுகாப்பு எதிர்நோக்கும் சிக்கலான, கடினமான நிலைமையை ஆழமாக உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்பு முறைமை மற்றும் ஆற்றலின் நவீனமயமாக்கத்தை விரைவுபடுத்தி, புதிய பாதுகாப்பு அமைப்பு மூலம் புதிய வளர்ச்சி நிலைமைக்கு உத்தரவாதம் அளித்து, தேசிய பாதுகாப்புப் பணியின் புதிய நிலையை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பு இடர்பாட்டுக் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறைமையை உருவாக்க விரைவுபடுத்துவது தொடர்பான கருத்துகளும், தேசிய பாதுகாப்புக் கல்வியை முழுமையாக வலுப்படுத்துவது பற்றிய கருத்துக்களும், இதில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.