சீனாவில் ரோபோடாக்சியை அறிமுகப்படுத்த முன்மொழிந்தது டெஸ்லா 

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது சமீபத்திய சீன பயணத்தின் போது சீனாவில் செல்ஃப் -டிரைவிங் (FSD) வாகனங்களின் திறன்களை ரோபோடாக்சிகளாக அறிமுகப்படுத்த முன்மொழிந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

சீன அரசாங்கமும் மஸ்கின் திட்டத்திற்கு சில ஆதரவை வழங்கி உள்ளது.
எலான் மஸ்க் சீனாவிற்கு அண்மையில் சென்றிருந்தபோது டெஸ்லாவின் அதிநவீன FSD மென்பொருளை வெளியிடுவதற்கான ஒழுங்குமுறை அனுமதியை அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சீனாவின் டாக்ஸி சேவைகளில் FSD செயல்பாடுகளை செயல்படுத்தவும் மஸ்க் முன்மொழிந்ததாக சைனா டெய்லி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

You May Also Like

More From Author