கோடைகால தாவோஸ் என்று அழைக்கப்படும் உலகப் பொருளாதாரக் கருத்தரங்கின் 14வது ஆண்டு கூட்டம், ஜுன் 27ம் நாள் முதல் 29ம் நாள் வரை சீனாவின் தியன் ஜின் மாநகரில் நடைபெறவுள்ளது.
“தொழில் முனைவோர் எழுச்சி:உலகப் பொருளாதாரத்துக்கு உந்து சக்தி”என்பது, இவ்வாண்டு கூட்டத்தின் தலைப்பாகும். அரசியல், வணிகம், கல்வி, சமூக மற்றும் சர்வதேச அமைப்புகள் முதலிய துறைகளைச் சேர்ந்த சுமார் 1500 திறமைசாலிகள் அதில் பங்கெடுக்கவுள்ளனர்.
ஆசியா மற்றும் உலகின் பல்வேறு இடங்களின் புத்தாக்க ஆற்றலையும், தொழில் முனைவோரின் எழுச்சியையும் தூண்டி விடுவது, பொருளாதார மீட்சி மற்றும் சுமுகமான வளர்ச்சி வழிமுறையை நாடுவது, சீனா மற்றும் முழு ஆசியாவின் பொருளாதார எதிர்காலத்தையும் அறிந்து கொள்ள உதவுவது முதலியவை, நடப்புக் கூட்டத்தின் மைய இலக்காகும்.