31ஆவது உலகப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கோடைக்கால விளையாட்டுப்போட்டியில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு

 

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை திங்கள் 27ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை, சீனாவின் செங்து மாநகரில் நடைபெறவுள்ள 31ஆவது உலகப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கோடைக்கால விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுக்கத் திட்டமிட்டுள்ளார். அத்துடன், இப்போட்டி துவக்க விழாவில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வரவேற்பு விருந்துகளை நடத்துவதோடு, பல இரு தரப்பு சார் நிகழ்வுகளை நடத்துவார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹூவாசுன்யீங் 24ஆம் நாள் தெரிவித்தார்.

இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோகோ விதோடோ, மவுரித்தானியா இஸ்லாமிய குடியரசுத் தலைவர் கஜுவானி, புரூண்டி குடியரசு அரசுத் தலைவர் என்டாஇஸ்மியே, கயானா கூட்டுறவுக் குடியரசு அலி, ஜோர்ஜியா தலைமையமைச்சர், பிஜி குடியரசு தலைமையமைச்சர் ராபுகா முதலியோர் இப்போட்டியின் துவக்க விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். 

You May Also Like

More From Author