சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 21ஆம் நாள் பிற்பகல் மாஸ்கோவிலுள்ள கிரெம்ளின் மாளிகையில் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீன-ரஷிய உறவு, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம், இரு தரப்பினரும் புதிய முக்கிய ஒத்த கருத்துக்களை உருவாக்கியுள்ளனர்.