133ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்காட்சி மே 5ஆம் நாள் நிறைவு பெறுகிறது. 4ஆம் நாள் வரை, இப்பொருட்காட்சிக்கு வருகை தந்த நபர்களின் எண்ணிக்கை 28.37 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும், 3 காலகட்டங்களாக நடைபெற்ற இப்பொருட்காட்சியில், சுமார் 35 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்களுடன் கலந்து கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கையும், பொருட்காட்சியின் பரப்பளவும் வரலாற்றில் புதிய உயர் பதிவை உருவாக்கியுள்ளன.
தொழிற்துறை தானியக்கம் மற்றும் நுண்ணறிவு தயாரிப்பு உள்பட 3 புதிய காட்சியிடங்களும், பொலிவுறு வாழ்க்கை உள்பட 3 சிறப்பு காட்சியரங்குகளும் நடப்பு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டன. இதன் மூலம், மேலதிக தொழில் நிறுவனங்கள் உலகச் சந்தையை விரிவாக்குவதற்குப் பரந்த தளம் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பு பொருட்காட்சியில் இறக்குமதிக்கான காட்சியிட அளவு முன்பை விட அதிகம். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 370 தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன. சீன தயாரிப்புகள் இந்த நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதோடு, அவற்றின் பல தயாரிப்புகள் சீன சந்தையில் நுழைந்துள்ளன.