மே 19ஆம் நாள் முற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஷான்சி மாநிலத்தின் சி ஆன் நகரில், சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். இதில் அவர் நிகழ்த்திய உரையில், சீன-மத்திய ஆசிய நாடுக்களுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து, 8 ஆலோசனைகளை வழங்கினார்.
சீனாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும், இந்த உச்சிமாநாடு, புதிய மேடையை வழங்கி, புதிய வளர்ச்சி எதிர்காலத்தைத் தொடக்கியுள்ளது. இந்த உச்சிமாநாட்டை வாய்ப்பாக கொண்டு, பல்வேறு தரப்புகளுடன் நெருக்கமாக ஒத்துழைக்க சீனா விரும்புகிறது. சீன-மத்திய ஆசிய நாடுகளின் ஒத்துழைப்புகளை சீராக வரைந்து, வளர்க்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அமைப்புமுறையின் கட்டுமானத்தை மேம்படுத்துதல், பொருளாதார வர்த்தக உறவை விரிவாக்குதல், ஒன்றுடன் ஒன்று இணைப்பை அதிகரித்தல், எரியாற்றல் ஒத்துழைப்புகளை விரிவாக்குதல், பசுமைசார் புத்தாக்கத்தை முன்னேற்றுதல், வளர்ச்சி உந்து ஆற்றலை உயர்த்துதல், பண்பாட்டுப் பேச்சுவார்த்தையை வலுபடுத்துதல், பிரதேச அமைதியைப் பேணிக்காத்தல் ஆகிய 8 ஒத்துழைப்பு ஆலோசனைகளை அவர் முன்வைத்தார்.