இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் மயமாக்கப் பணிக்குச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் முக்கிய உத்தரவிட்டார். கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு சீனாவின் இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் மயமாக்கப் பணியில் பெரும் சாதனை பெறப்பட்டுள்ளது. இப்பணிக்கான கட்சியின் தலைமை முழுமையாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. விரிவான இணைய மேலாண்மை முறைமை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதோடு, இணையப் பாதுகாப்பு உத்தரவாத முறைமை மற்றும் திறனும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.
மேலும், புதிய யுகத்தின் புதிய பயணத்தில், இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் மயமாக்கப் பணியின் முக்கியத் தகுநிலை மேலும் தெளிவாகியுள்ளது. இந்நிலையில், இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் மயமாக்கப் பணியின் உயர்தர வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றி, இணையக் கட்டுமானத்தின் புதிய சாதனையின் மூலம் நவீன சோஷலிய நாட்டின் பன்முகக் கட்டுமானத்துக்கும், சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சிக்கும் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சீனத் தேசிய இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் மயமாக்கப் பணிக் கூட்டம் ஜுலை 14, 15 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஷி ச்சின்பிங்கின் உத்தரவு தெரிவிக்கப்பட்டது.